அணைக்கட்டு அருகே தனியார் நூற்பாலை தொழிலாளரை பணத் துக்கான கடத்திய 4 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை (27). வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள ஓங்கப்பாடியைச் சேர்ந்தவர் சந்தானம் (28). நண்பர்களான இருவரும் கோவையில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.
இவர்கள் இருவரும் ஓங்கப் பாடியில் உள்ள டாஸ்மாக்கில் மதுபானம் குடித்துள்ளனர். பின்னர், இருவரும் இரு சக்கர வாகனத்தில் அணைக்கட்டு-ஒடுக்கத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த கும்பல் திடீரென திருமலையை காரில் கடத்திச் சென்றனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சந்தானம் அலறி கூச்சலிட்டார். அதற்குள் கார் வேலூர் நோக்கி சென்று விட்டது.
இதற்கிடையில், திருமலையின் நண்பர் கார்த்திக் என்பவரை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவ்வளவு பணம் தர முடியாது என கார்த்தி தெரிவித்துள்ளார். பேரத்தின் முடிவில், ரூ.10 ஆயிரம் கொடுக்குமாறு பேசிய கும்பல் பணத்துடன் வேலூர் அடுத்த மேல்மொணவூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே வருமாறு கூறி யுள்ளனர்.
இதற்கிடையில், திருமலை கடத்தப் பட்டது குறித்து வேப்பங் குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், தனிப்படை அமைத்து மேல்மொணவூர் அருகே சுற்றிவளைத்து திருமலையை மீட்டதுடன், 4 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் காட்பாடி உள்ளிபுதூரைச் சேர்ந்த சீனிவாசன், வண்டறந் தாங்கல் பகுதியைச் சேர்ந்த சக்தி, விருதம்பட்டைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார், சேனூரைச் சேர்ந்த விக்னேஷ் என தெரிய வந்தது.
அவர்களிடம் கடத்தல் குறித்தும் கடத்தலில் வேறு யாருக் காவது தொடர்பு உள்ளதா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago