ஈரோட்டில் நேற்று ஒரே நாளில் 205 மையங்களில், 32 ஆயிரத்து 360 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இன்று 11 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 9.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 205 மையங்களில் நேற்று 32 ஆயிரத்து 360 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று (26-ம்தேதி) 212 மையங்களில் 11 ஆயிரத்து 610 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைக் காட்டிலும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையின் நேற்றைய அறிக்கையின்படி, கரோனா தொற்றால் 130 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தொற்றிலிருந்து 157 பேர் குணமடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 707ஆக உள்ளது. இதில், 95 ஆயிரத்து 448 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 643 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் 1,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago