அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத்தெரு கடியாங்குளம் ஏரிக்கரையில் வீரனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒன்றரை அடி உயரம் கொண்ட இரு கலசங்கள் பொருத்தப்பட்ட மூல கோபுரம் உள்ளது. இந்த கோயில் கோபுரத்தில் இருந்த 2 கலசங்களும் திருடு போயிருந்தது நேற்று தெரிய வந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கலசங்களை திருடிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago