பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் பெண் போலீஸாருடனான ஆலோசனைக் கூட்டம் எஸ்.பி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, எஸ்.பி மணி தலைமை வகித்து, காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் முறைகள், இலவச தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கும்போது அல்லது உதவி கோரும்போது அவர்களிடம் பேசும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி பாண்டியன், ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீஸார் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago