திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த - மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து, 135 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், கந்திலி, நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங் களில் 208 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

எனவே, இம்மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்தசிறப்பு முகாமில் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

இன்று (நேற்று) நடைபெறும் சிறப்பு முகாமில் 150 மாற்றுத் திறனாளிகள் அளித்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 120 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்தினாளிகளில் சிலர் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு தண்ணீர் படுக்கை மற்றும் காற்றுப்படுக்கை கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தனர். அதில், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது தண்ணீர் படுக்கை மற்றும் காற்றுப்படுக்கைள் இன்று (நேற்று) வழங்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட மாற்றத்திறனாளிகள் நலத்துறையில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள லாம்’’ என்றார். இந்நிகழ்ச்சியில், மருத் துவர்கள் செல்வநாதன், சசிகலா, செந்தில்நாதன், பிரபாவராணி, உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனத் தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்