ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் ஏரியில் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு 4-வது பட்டாலியன் மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் வெள்ள பேரிடர் காலத்தில் நீர்நிலைகள் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொள்பவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல் விளக்க மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டு பேசும்போது, "உலகில் பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு பேரிடர்களால் அழிவுகள் ஆங் காங்கே நடந்து வருகிறது.
பருவ நிலை மாற்றத்தால் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின் றன. தொழிற்சாலைகள் மூலமும் சில பேரிடர் ஏற்படுகிறது. இது போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்க இது போன்ற செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி கள் நடத்தப்படுகின்றன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் முதல் தகவல் மற்றும் உதவிகளை அளிப்பவர்கள் 500 பேர் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல் படுவது என்பது குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இங்கு செயல்விளக்கம் அளிக்கப்படுவதை பொதுமக்கள் கவனமாக தெரிந்துக்கொண்டு வெள்ள பாதிப்பு காலங்களிலும், நீர்நிலைகளில் சிக்கிக் கொள் ளும்போது மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, பெரு வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர் களை மீட்பது குறித்த செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சியை மீட்பு துறையினர் செய்து காட்டினர். அதேபோல, தீயணைப்புத் துறையினரும், தேசிய மீட்பு குழுவினரும் இணைந்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி செயல்விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில், பேரிடர் ஏற்படும் இடங்களில் உள்ள பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் வகையில் தேவையான துணி, கண்ணாடி, பிரஸ், பேஸ்ட், சோப், டவல் உள்ளிட்ட பொருட்களை 30 பேருக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச் சந்திரன், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுத் தலைவர் வைத்தியலிங்கம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், வட்டாட்சியர் ஆனந்தன், தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வாளர் ரோகித்குமார், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, காவல் ஆய்வாளர் காண்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago