பெருந்துறை பகுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள - வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரைப் பிடிக்க தனிப்படை தீவிரம் :

By செய்திப்பிரிவு

சட்டவிரோதமாக ஊடுருவி, பெருந்துறை பகுதியில் தலைமறைவாகியுள்ள வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவர்களைக் கண்டறிய காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பெருந்துறை பணிக்கம் பாளையம் பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இபாதுல் அலி (22) மற்றும் முஜாம் மண்டல் (30) ஆகிய இருவரை பெருந்துறை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லை.

இவர்களுடன் தங்கியிருந்த ஜஹாங்கீர், ஆகாஸ் என்ற இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்க பெருந்துறை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் திருப்பூர் - ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டுவரும் பனியன் கம்பெனிகள், கட்டிட வேலை நடைபெறும் இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். இருவரது புகைப்படங்களும் அனைத்து காவல் நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்