மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் நாமக்கல்லில் 48,350 பேருக்கு சிகிச்சை :

நாமக்கல் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 48 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்திற்கு உட்பட்ட பைல்நாடு ஊராட்சி மேக்கினிக்காடு கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் கடந்த 5-ம் தேதி மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் கொல்லிமலை வட்டாரத்தில் மட்டும் முதல்கட்டமாக 16 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 1 இயன்முறை மருத்துவர், 1 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர் ஆகியோர் இல்லம் தேடி வரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் கொல்லிமலையில் மட்டும் உயர் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோயாளிகள், வீட்டுமுறை சிகிச்சை என மொத்தம் 1,639 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,327 நபர்களுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் 48,340 பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE