திருச்சியில் நடைபெறும் வீட்டு வசதி வாரிய சிறப்பு முகாமின் முதல் நாளில் 60 பேருக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திருச்சி பிரிவில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று இதுவரை விற்பனை பத்திரம் பெறாதவர்களுக்கான 3 நாள் சிறப்பு முகாம் நேற்று காஜாமலை காலனியிலுள்ள திருச்சி பிரிவு அலுவலகத்தில் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இம்முகாமை தொடங்கி வைத்தார்.
திருச்சி பிரிவுக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மனை, வீடு பெற்று, அதற்கான முழு தொகையையும் செலுத்தி இருந்த பலர் இம்முகாமில் பங்கேற்றனர். அவர்களின் ஆவணங்களை வீட்டு வசதி வாரிய திருச்சி பிரிவு செயற்பொறியாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் முதல் நாளான நேற்று 60 பேருக்கு பத்திரங்கள் வழங்கப்பட்டன. இன்றும், நாளையும் (ஆக.25,26) இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் வீடு, மனைக்காக ஏற்கெனவே முழு தொகையையும் செலுத்தியவர்கள், அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்களது பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago