திருநெல்வேலியிலுள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 24 மணிநேரமும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சித்த மருத்துவ மாணவி உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் 2 இடங்களில் தடுப்பூசிபோடும்பணி நடைபெற்று வந்தது.18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு மையத்திலும், 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மற்றொருமையத்திலும் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது பல்நோக்கு மருத்துவமனையில் 24 மணிநேரமும் தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 4.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருநெல்வேலி மாவட்டம் முழுக்கநேற்றுமுன்தினம் 2,310 பேருக்குகரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள்நேற்று வெளியாகியது. அதில் 7 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வள்ளியூர் வட்டாரத்தில் பழவூரை சேர்ந்த ஒரு தம்பதிக்கும், அவர்களது 5 வயது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர பகுதியில் பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவி என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago