நெல்லையில் கிராம சாலைகள் திட்ட கருத்தரங்கு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமமந்திரி கிராம சாலை திட்டம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு பேசியதாவது:

வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி உயரிய தரத்துடன் சாலைகளை அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் வடிகால் ஓடை அமைக்கப்பட்டு, சாலைகள் சேதப்படாமல் இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்குசாலைகளின் பங்கு இன்றியமையாதது. பிரதம மந்திரி கிராமசாலைகள் திட்டத்தின் முதல்கட்டம்2000-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 500 பேருக்கு மேலுள்ள அனைத்து குக்கிராமங்களில் உள்ளஇணைப்பு சாலைகளை தேர்வுசெய்து சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 2-வது கட்ட திட்டம் 2013-ம்ஆண்டு தொடங்கப்பட்டு பிரதான சாலை மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டது. 3-ம் கட்ட திட்டம் 2019-ம் ஆண்டு முதல்தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் குக்கிராமங்களில் இருந்து சந்தை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை இணைக்கும் பிரதான சாலை மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகள் மேம்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்பழனி, மாநில சாலைகள் தர கண்காணிப்பாளர் இசக்கிமுத்துசெல்வன், செயற்பொறியாளர் அசன்இப்ராஹிம், உதவி பொறியாளர் நாதன், உதவி செயற்பொறியாளர் முருகன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்