போளூர் கோட்டை மைதானத்தில் பழமையான கல்வெட்டுடன் கூடிய கல்தூண் கண்டெடுக்கப் பட்டுள்ளதையடுத்து, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் போளூர் கோட்டை மைதானத்தில் ஒரு கல்வெட்டுடன் கூடிய தூண் சமீபத்தில் கண்டெடுக்கப்பட் டுள்ளது. இக்கல்வெட்டு குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் விளை யாட்டு மைதானமாக கோட்டை மைதானம் உள்ளது. அங்கு, பழமையான கல்வெட்டு கண் டெடுக்கப்பட்டுள்ளது. அது கோயில் தூணாக இருக்கக்கூடும். மேலும், ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தது என கூறப் படுகிறது.
கோட்டை மைதானத்தின் பல இடங்களில் கோயில் தூண்களும் மற்றும் கட்டுமானப் பகுதிகளும் காணப்படுகின்றன. சோழர் காலத்தில் கோயில் இருந்திருக்க வேண்டும். பின்னர் காலநிலை மாற்றத்தால், கோயில் சிதைந்து இருக்கலாம். கண்டெடுக்கப் பட்டுள்ள கல் வெட்டில், ராஜ ராஜனின் மெய்க் கீர்த்தி மற்றும் ஊர் சபை குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல் ஸ்தூபி கண்டெடுக்கப்பட்டு, தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்ததாக தகவல் உள்ளது. அதன்பிறகு, அது குறித்த தகவல் பதிவு செய்யப்படவில்லை. கோட்டை மைதானத்தில் தொல்லியல் துறையினர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தால், பழமையான கோயில் அல்லது கட்டுமானம் இருந்ததற்கான தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago