கோவை, நீலகிரி மாவட்டங்களில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனை யில் தடுப்பூசி மையத்தை மாவட்டஆட்சியர் ஜி.எஸ் சமீரன் தொடங்கிவைத்து செய்தியாளர் களிடம் கூறியதாவது: தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து செயல்படுத்தவும், அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏதுவாகவும் முதல்வரின் உத்தரவுப்படி கோவை அரசு மருத்துவமனையில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் தடுப்பூசி செலுத்தும் மையம் தொடங்கி வைக்கப்பட்டுள் ளது. இதேபோல, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, அன்னூர், கோலார்பட்டி, சுண்டக்காமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் தடுப்பூசிகள் செலுத்தப்படும். இந்த மையங்களில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், உள்நோயாளிகள், புறநோயாளி கள், நோயாளிகளின் உடன் இருப்பவர்கள், மாற்றுத்திறனாளி கள், முன்களப்பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது, கோவை அரசு மருத்துவ மனை டீன் நிர்மலா, சுகாதாரத் துறை இணை இயக்குநர் அருணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் இத்திட் டத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து செய்தியாளர் களிடம் கூறியதாவது: மாவட்டத் தில் உலிக்கல், பிக்கட்டி, கோத்தகிரி பேரூராட்சிகளில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.18 வயதுக்கு மேற்பட்ட 5.82 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது 4.46 லட்சம் பேருக்கு (70 சதவீதம்) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 60 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு 72 சதவீதமும், 45-60 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு 80 சதவீதமும், 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 61 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 22 சதவீதம் பேருக்கு செலுத்தப் பட்டுவிட்டது.
தற்போது 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago