இக்கல்லூரியில் இளங்கலை பிரிவில் 23 பாடப் பிரிவுகள், முதுகலை பிரிவில் 21 பாடப் பிரிவுகள், 16 ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 1,433 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 19,054 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்லூரியின் பிரத்யேக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக, கல்லூரி நிர்வாகத்தினர் கூறும்போது,‘‘முதல் நாள் கலந்தாய்வு விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 27-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கு பாடவாரியாக நேரடியாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அனைத்து கலந்தாய்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மாணவ, மாணவிகள், கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதோடு, தேவையான அனைத்து சான்றுகளையும் எடுத்து வர வேண்டும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago