தளர்வுகள் அளிக்கப்பட்ட முதல் நாளான நேற்று, தமிழகத்தில் 30 சதவீததிரையரங்குகள் திறக்கப்பட்டதாக, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான திரையரங்குகள் கடந்த ஏப்ரல் முதல் முழுவதும் மூடப்பட்டன.
தற்போது, கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், தமிழக அரசு சார்பில் பல்வேறு தளர்வு களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திரையரங்கு கள் இயங்க அரசு அனுமதியளித்தது. இதில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கு கள் இருக்க வேண்டும்.
திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப் பட்டிருக்க வேண்டும் என்பன உட்பட சில கட்டுப்பாடுகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருப்பூர் மாவட்டத்தில் நேற்று திரையரங்குகள் திறக்கப்பட்டதால், ரசிகர்கள் உற்சாகத்துடன் காணப் பட்டனர்.
படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப் பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. ஏற்கெனவே, சமூக இடைவெளியுடன் தயார் செய்யப்பட்ட இருக்கைகளில் பார்வையாளர்கள் அமரவைக்கப் பட்டனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி ஃபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, "தமிழகத்தில் திரை யரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட முதல் நாளான நேற்று, 30 சதவீத திரையரங்குகள் மட்டுமே இயங்கின.
பராமரிப்பு பணி உள்ளிட்ட ஏற்பாடுகள் முழுமையடையாததால், பல திரையரங்குகள் திறக்கப் படவில்லை.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை, 15 சதவீத திரையரங்குகள் மட்டுமே இயங்கின. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 168 திரை யரங்குகள் உள்ளன.
இதில் 30 சதவீதம் மட்டும் இயங்கின. வரும் நாட்களில்தான் புதிய படங்கள் திரைக்கு வர உள்ளன. படங்கள் வரத் தொடங்கியதும், பெரும்பாலான திரையரங்குகளை திறப்பார்கள்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago