ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி அம்மா உணவக ஊழியர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 15 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஈரோடு மாநகராட்சியில் 11 இடங்களிலும் , கோபி, சத்தி, புளியம்பட்டி, பவானி ஆகிய நகராட்சி சார்பில் 4 இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் 158 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் இயங்கும் அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 15 அம்மா உணவகத்தில் 158 பேர் பணியாற்றி வருகிறோம். இதில் நகராட்சி சார்பில் செயல்படும் 4 அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தினமும் ரூ.350 ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், மாநகராட்சி சார்பில் இயங்கும் அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.250 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு காலத்திலும் பணியாற்றிய எங்களுக்கு நகராட்சி சார்பில் வழங்கப்படுவது போல், தினமும் ரூ.350 ஊதியம் வழங்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago