தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். மாநில தலைவர் குமார், மாநில பொதுச்செயலாளர் பொன்னிவளவன்,அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அருணகிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு 28 சதவீத அகவிலைப் படியை உடனடியாக அறிவிக்க வேண்டும். 2003-ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு மீண்டும் பழைய முறையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும். நிரந்தர காலிப்பணியிடங்களில் அரசால் தற்காலிகமாக அரசின் விதிகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்பட்ட 3 ஆயிரம் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தற்காலிக, தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதிய வரன்முறை செய்யப்படுவதோடு நிரந்தர பணியாளர்களுக்கு இணையான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. .
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago