கள்ளக்குறிச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை
நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. இதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் இம்மாதம் 27-ம் தேதி வரை கள்ளக்குறிச்சி கிளை அலுவலகத்தில் (முகவரி: எண் 59, கோபுரம் டவர்ஸ்,3வது மாடி, துருகம் சாலை, கள்ளக்குறிச்சி 606 602. தொலைபேசி எண்: 04151-290825) நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் முகாம்வாயிலாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறுதிட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகின்றன. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்திற்கு ( NEEDS) ஆய்வுக் கட்டணத்தில் முழு விலக்குஅளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின்மானிய சேவைகளை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago