புதுச்சேரி எல்லையான கோரி மேடு அருகே விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட கலைவாணர் நகரில் உள்ள சர்வீஸ் ரோட்டில் ஓட்டலில் இருந்து கழிவுநீர் சாலைகளில் விடப்படுகிறது. அப்பகுதி குடியிருப்புவாசிகள் காந்திராஜன் தலைமையில் விழுப்புரம் ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பது:
வானூர் வட்டம் கலைவாணர் நகர் குறிஞ்சி வீதியின் முன்புறம் உள்ள உணவு விடுதியிலிருந்து வெளியேறும் புகையால் குடியிருப்பு வாசிகள் மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். உணவு விடுதி கழிவுநீர் தெருவில் விடப்படுவதால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகிறது.
கழிவுநீர் லாரியின் மூலம் சுத்தம் செய்யும்போது கழிவு மண்டியை சாலைகளில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago