சிவகங்கை அரசு மருத்துவமனையில் - 2 தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் கேட்ட 2 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் பிரசவம், குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பப்பை அகற்றுதல் போன்ற காரணங்களுக்காக, 350-க்கும் மேற் பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த வார்டில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் ரூ.200, ஆண் குழந்தை பிறந்தால் ரூ.300, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால் ரூ.300 முதல் ரூ.500, ஸ்ட்ரெக்சரில் நோயாளிகளை தள்ளிச் செல்வதற்கு ரூ.200 மருத்துவ ஊழி யர்கள் கேட்பதாகவும், பணம் தராவிட்டால் அவதூறாகப் பேசுவதாகவும் அடிக்கடி புகார் வந்தது.

இந்நிலையில் பணம் கேட்டதாக எழுந்த புகாரில் அவுட் சோர்சிங் முறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் 2 பேரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

மேலும் ஊழியர்கள் யாரேனும் பணம் கேட்டால், எழுத்துப் பூர்வமாக புகார் கொடுக்கலாம் எனவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்