தமிழக அரசு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கும் வகையில் கடன் மேளா ஈரோட்டில் நடக்கிறது.
தமிழக அரசின் தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில், தொழில் முனைவோர் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கவும், தற்போது இயங்கிக்கொண்டு இருக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்தவும், பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் இக்கழகம் கடனுதவி வழங்கி வருகிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் ஈரோடு கிளை அலுவலகம் சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும் 27-ம் தேதி வரை நடக்கவுள்ளது. கடன் மேளாவில் கடன் வழங்கும் திட்டங்கள், மானியங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படுகிறது. கடன் பெற தகுதியுடைவர்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியம் ( ரூ.1.50 கோடி வரை) வழங்கப்படும்.
முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். என்.இ.இ.டி.எஸ். திட்டத்திற்கு ஆய்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் மானியத்துடன் கூடிய கடன் பெறலாம். இது தொடர்பான விவரங்களுக்கு ஈரோடு பெரியார் நகர் சிதம்பரம் காலனி, செங்கோட்டையா காம்ப்ளக்சில் உள்ள ஈரோடு கிளை அலுவலகத்தை அணுகலாம் என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago