சிவகிரியில் 37 மி.மீ. மழை :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம்அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வரும் நிலையில், வெப்பச் சலனம் காரணமாக நேற்று முன்தினம் இரவுசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேற்று காலை 8மணி வரை 24 மணி நேரத்தில்சிவகிரியில் 37 மிமீ, ஆய்க்குடியில் 14, தென்காசியில் 2.40, சங்கரன்கோவிலில் 2.30, கருப்பாநதி அணை யில் 1 மிமீ மழை பதிவானது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடனாநதிஅணை நீர்மட்டம் 68.10 அடியாகவும், ராமநதி அணை 66.50, கருப்பாநதி அணை 62.34, அடவிநயினார் அணை நீர்மட்டம் 120.50 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மழைப் பதிவு இல்லை. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 540கனஅடி நீர் வந்தது. 1,305 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. அணைநீர்மட்டம் 91.90 அடியாக இருந்தது.சேர்வலாறு அணையில் 91.70 அடி, மணிமுத்தாறில் 66.20, வடக்கு பச்சையாறு 16.65, நம்பியாறு 11.25மற்றும் கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 28.25 அடியாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்