செய்யாறு அருகே அத்தி கிராமத்தில் பழமையான முருகன் கோயில் உள்ள மலையை பாதுகாக்க, கல் குவாரிக்கு விடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக தி.மலை மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று வைக்கப்பட்டிருந்த பெட்டியில், கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் செலுத்தினர்.
ஆட்சியர் பா.முருகேஷிடம் செய்யாறு அடுத்த அத்தி கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், “மலை மீது முருகன் கோயில் உள்ளது. மலையடிவாரத்தில் கன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் களில் பல தலைமுறைகளாக வழிபாடு செய்து வருகிறோம்.
இந்நிலையில், மலையை கடந்த 22-01-2019-ம் தேதி கல் குவாரி குத்தகைக்கு 10 ஆண்டுகள் விடப்பட்டுள்ளன. மக்களின் பார்வையில் இருந்து மறைக்க, வெளிப்படையான அறிவிப்பு செய்து கருத்து கேட்காமல், அரசிதழிலில் மட்டும் வெளியிடப் பட்டுள்ளது. விளை நிலங்கள் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாக மலை உள்ளது. வன விலங்குகள் வாழ்விடமாக இருக்கிறது. கல் குவாரிக்கு எதிராக ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வட்டாட்சியர், சார் ஆட்சியர், சட்டப் பேரவை உறுப்பினர்களிடம் முறையிட்டும் பலனில்லை. எங்களது முன்னோர்கள் காலம் முதல் தொன்றுதொட்டு வணங்கி வரும் கோயில்களை பாதுகாக்கும் வகையில், கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயிலில் திருப்பணி செய்து கொள்ளவும் அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.
விவசாயிகள் தர்ணா
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கத்தினர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.அப்போது நிர்வாகிகள் நெடுவேல், கோபி ஆகியோர் கூறும்போது, “ஆரணி வட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த கூட்டு பட்டாவில் குளறுபடி செய்யப் பட்டுள்ளது. வெளி நபர்கள் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பட்டா மாற்றம் செய்து கொடுக்க மனு அளித்தும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியர் அலு வலகம் மற்றும் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு மனு அளித்தும் பலனில்லை. எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என கேட்டுக் கொண்டனர். பின்னர், அவர்களிடம் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
மனுக்களுக்கு தீர்வு இல்லை
ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அளிக்கப்படும் மனுக்களுக்கு தீர்வு காணவில்லை என கூறி உழவர் பேரவை சார்பில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நூதனப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது, பெட்டியில் போடப்படும் மனுக்கள் உறங்குகிறது என கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வூதியம் வழங்குக...
தண்டராம்பட்டு வட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் அளித்துள்ள மனுவில், “அங்கன் வாடி மையங்களில் கடந்த 34 ஆண்டுகள் பணியாற்றி உள்ளோம். எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கூடுதல் மையப் பொறுப்புக்கான ஓய்வூதியத் தொகையை 3 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப் பட்டது. இந்நிலையில், ஓய்வூதியத் தொகை கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையை நம்பி வாழ்ந்து வரும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங் களுக்கு தடையில்லாமல் மாத மாதம் வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்தை வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago