கடலூரில் கரோனா விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் கரோனாவிழிப்புணர்வு வாகனத்தை கடலூர்சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப் பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம் நேற்று கொடியசைத்து தொடக்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு வாகனம் சென்னையில் உள்ள மத்திய அரசின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் 75-வது சுதந்திர பெருவிழா மற்றும் கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று (ஆகஸ்ட் 22) தொடங்கி இன்றும் கடலூர் மாவட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகை யில் குறும்படங்கள் திரையிடப்ப டுகிறது.
முன்னதாக கடலூர் டவுன்ஹாலில் இருந்து சில்வர் பீச் சாலையில் உள்ள இந்திய மருத்துவ கழகம் வரை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் ஆரோக்கிய இந்தியா விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
எஸ்பி சி.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார் ஜி.கிரியப்பனவர்,இணை இயக்குநர் (நலப்பணிகள்) ரமேஷ் பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மீரா, மக்கள் தொடர்பு அலுவலக துணை இயக்குநர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago