தமிழ்நாட்டில் 24 சுங்கச் சாவடிக ளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல்கட்டணம் உயர்த்த இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழகவாழ்வுரிமை கட்சி தெரிவித் துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய நெடுஞ்சாலை ஆணையகட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின் றன. இதில் 24 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அவை தவிர்த்து, மீதமுள்ள விக்கிரவாண்டி, ஓமலூர்,தருமபுரி உள்ளிட்ட 24 சுங்கச்சாவடி களில் வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பின் தன்மைகளுக்கேற்ப தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. இருப்பினும், தமிழ்நாட் டில் இன்னும் இயல்புநிலை முழுமையாக திரும்பவில்லை. ஏற் கெனவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது.வாகனங்கள் வாங்கும் போதே, சாலை வரி வசூலிக்கப்படுகிறது. மேலும், எரிபொருள் விலையுடன் சாலை மேம்பாட்டுக்காக ஒரு குறிப்பிட்டத் தொகையும் சேர்த்து வசூலிக் கப்படுகிறது. இதை செலுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணமில்லாத சாலை வசதியை செய்து தர வேண்டியது அரசின்கடமை. பொதுமக்கள் பயன்படுத் தும் சேவைக்கான கட்டணத்தை உயர்த்துவதாக இருந்தால், அது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், சுங்கச்சாவடி நிர்வாகங்களும், தேசிய நெடுஞ்சாலை கள் ஆணையமும் இவ்விதிகளை மதிக்காமல் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.தற்போது வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு காரணமாக, சரக்கு வாகன வாடகை, ஆம்னி பேருந்து கட்டணம் உள்ளிட்டவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இது மறைமுகமாக அத்தியாவசியப் பொருட் களின் விலையை உயர்த்துவதோடு, விலைவாசி உயர்வையும் ஏற் படுத்தும். எனவே இந்த கட்டண உயர்வை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago