தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் மருந்தாளுநர் களே முழுநேரமாக பணிபுரிவதை உறுதி செய்ய தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னத்துரையிடம் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கார்த்திக் நேற்று அளித்த மனு விவரம்:
மருந்துக் கடைகளை திறக்க பதிவுற்ற மருந்தாளுநரின் சான்றிதழ் அவசியம். ஆனால், இத்தகைய சான்றிதழை பதிவு பெற்ற மருந்தாளுநர்களிடம் வாடகைக்கு பெற்றுக்கொண்டு பெரும்பாலான மருந்துக்கடைகள் இயங்குகின்றன.
முழுநேரமாக பணிபுரிய வேண் டிய பதிவுபெற்ற மருந்தாளு நர்கள் அங்கு இருப்பதில்லை. மருந்துக்கடைகளில் பதிவுற்ற மருந்தாளுநர்களோ அல்லது அவர்களின் மேற்பார்வையிலோ மருத்துவரின் பரிந்துரை சீட்டு அடிப்படையில் மருந்து வழங்கப்பட வேண்டும் என மருந்தியல் சட்டம் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள மருந்துக்கடைகளில் இந்த விதி முறைகள் முறையாக பின்பற் றப்படுவதில்லை.
வலி மாத்திரைகளை மருத்துவர் களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போலி மருந்தாளுநர்களிடம் வாங்கி போதை மாத்திரைகளாக பயன்படுத்தும் போக்கும் அண்மை காலமாக இளைஞர்களிடம் வேக மாக பரவி வருகிறது.
இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், மருந்து ஆய் வாளர்கள் ஆய்வு செய்தாலும் அபராதமாக ரூ.500 செலுத்திவிட்டு மீண்டும் முறைகேடுகள் தொடர் கின்றன.
எனவே, எந்த பதிவுபெற்ற மருந்தாளுநர்களின் சான்றிதழைக் கொண்டு மருந்துக்கடைகள் இயங் குகிறதோ அந்த நபரே அங்கு முழுநேரப் பணியாளராக பணிபு ரிவதை உறுதி செய்ய வேண்டும்.
முழுநேரமாக பணிபுரியாமல், சான்றிதழை மட்டும் வாடகைக்கு வழங்கும் மருந்தாளுநர்களின் பதிவுச் சான்றிதழை தடைசெய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ சின்னதுரை உறுதி அளித்ததாக மருந்தாளுநர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago