கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தென்னிலை உட்பட 4 இடங்களில் - ரூ.80 கோடியில் துணை மின் நிலையங்கள் : அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி யுடன் இந்திய தொழில் கூட்ட மைப்பு (சிஐஐ) கரூர் கிளை உறுப்பினர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி கரூரில் நேற்று நடைபெற் றது.

இதில், அமைச்சர் பேசியது:

தொழில்களுக்கான மின் இணைப்பு வழங்குவது எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் மின் கம்பங்கள் தேவையில்லாத மின் இணைப்புக்கு விண் ணப்பித்த உடன் இணைப்பு வழங்கப்படும். மின் உற்பத்தியை பெருக்குவதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 17,980 மெகாவாட் சொந்தமாக மின் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மின் பளு (ஓவர் லோடு) அதிகமுள்ள 5,700 மின்மாற்றி கள், மின்னழுத்த (லோ வோல் டேஜ்) குறைபாடுள்ள 3,200 மின் மாற்றிகள் என 8,900 மின்மாற்றி களை மாற்றியமைக்க ரூ.623 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை மாற்றினால் தான் சீரான மின்விநியோகம் பெறமுடியும்.

கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தென்னிலை, ஒத்தக்கடை, பழைய ஜெயங்கொண்டம் ஆகிய 4 இடங் களில் ரூ.80 கோடியில் துணை மின் நிலையங்கள் அமைக் கப்படும்.

கரூர் மாவட்ட வர்த்தகம் ரூ.8,000 கோடியாக உள்ளது. இதை வரும் 2030-ம் ஆண்டில் ரூ.25,000 கோடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து செல்லப்படும். கரூரில் சிப்காட், சிறிய ஜவுளி பூங்கா, விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோடநாடு வழக்கு விசார ணையை கண்டு ஏன் அதிமுக வினர் பயப்படவேண்டும். தவறு செய்யாவிடில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே. மடியில் கனம் உள்ளதால் வழியில் பயம் உள்ளது. இதில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும். வட சென்னையில் நிலக்கரி இருப்பு குறித்து ஆய்வு செய்ய கடந்த ஆக. 2-ம் தேதி குழு அமைக்கப்பட்டு 6, 9-ம் தேதிகளில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், 2.38 லட்சம் டன் நிலக்கரி குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழு அமைத்தது, ஆய்வு செய்தது, குழு அளித்த ஆய்வறிக்கை நகல்களை வெளியிட்டுள்ளேன். இதேபோல, முன்னாள் அமைச்சர் அவர் குழு அமைத்தது, ஆய்வு செய்தது, அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நகலை வெளியிடட்டும். தவறு செய்தவர்கள் மீது அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், இந்தியன் தொழில் கூட்டமைப்பு தலைவர் புஷ்பராஜன், இண்டிகோ டெக்ஸ் டைல்ஸ் வெங்கடேஷ், மாஸ்டர் லெனின் உரிமையாளர் சேது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்