கரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களாக மூடியிருந்த திருப்பத் தூர் நகராட்சி காய்கறி மார்க்கெட் இன்று திறக்கப்படுகிறது. கரோனா தடுப்பூசி போட்ட வியாபாரிகள் மட்டுமே மார்க் கெட்டில் கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் தெரி வித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா காரணமாக பல மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டன. பொதுமக்கள் அதிக மாக கூடும் காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை, இறைச்சி மற்றும் மீன்கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது, கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த 2 வாரங்களுக்கு நீட்டிக் கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 23-ம் தேதி (இன்று) முதல் தியேட்டர்கள், மதுபானக்கூடங்கள் (பார்), பூங்காக்கள், மார்க்கெட் பகுதிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கான போக்குவரத்து சேவையும் தொடங்கவுள்ளன.
இதைத்தொடர்ந்து, திருப் பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான சக்தி நகரில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் இன்று முதல் திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணை யாளர் ஏகராஜ் கூறும்போது, “அரசு உத்தரவின்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சக்தி நகரில் உள்ள காய்கறி மார்க்கெட் நாளை முதல் (இன்று) செயல்பாட்டுக்கு வருகிறது. அங்கு கடை நடத்தி வரும் வியாபாரிகள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி 2 தவணை யையும் செலுத்தியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் கடை திறக்க அனுமதி வழங்கப்படும். கடை பணியா ளர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மார்க்கெட்டுக்கு வரு பவர்களும், கடைக்காரர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இன்று தடுப்பூசி முகாம்
இதுவரை தடுப்பூசி போடாத வர்கள் வசதிக்காக மார்க்கெட் வளாகத்திலேயே தடுப்பூசி முகாம் நாளை (இன்று)முதல் நடத்தப்படும். எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகள், பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago