வேலூரில் இருந்து முதற் கட்டமாக இன்று முதல் - கர்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கு 50 பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

கர்நாடகா, ஆந்திரா மாநிலங் களுக்கு பேருந்து சேவை இன்று முதல் தொடங்க இருப் பதால் வேலூரில் இருந்து முதற் கட்டமாக 50 பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பேருந்து போக்குவரத்து சேவை கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் கடந்த 4 மாதங் களாக இயக்கவில்லை.

வேலூரில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிறிஷ்டியான்பேட்டை வரை அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல, ஆந்திர மாநில பேருந்துகளும் அந்த மாநில எல்லை வரையில் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல, கர்நாடக மாநில பேருந்துகளும் மாநில எல்லைப்பகுதி வரை இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழக அரசு கரோனா பரவல் தொடர்பாக கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்த 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. இதில், ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் (இன்று) தமிழகத்தில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடங்கும் என அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, வேலூரி லிருந்து இன்று முதல் கர்நாடகா மாநிலம், பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் வேலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் நேற்று தொடங்கியது. வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை சீரமைக்கும் பணிகள் நேற்று நடந்தன. பெங் களூரு, ஆந்திரா, திருப்பதி, சித்தூர் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ள பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு, பயணிகள் இருக்கைகள் சுத்தம் செய்தல், வாகன பழுது பார்ப்பு, ஆயில், பிரேக், டயர் சரிபார்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்பப்பணிகளும் நேற்று நடைபெற்றன.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சித்தூர், திருப்பதி செல்லும் பேருந்துகளும், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு, மங்களூரு போன்ற இடங்களுக்கு முதற் கட்டமாக 50 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் ஆதரவை பொறுத்து பேருந்துகள் அதிகரிக்க அடுத்தடுத்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இன்று காலை முதல் வழக்கம்போல் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்’ என வேலூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல, கடந்த 5 மாதங் களுக்கும் மேலாக மூடப் பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் இன்று முதல் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் சினிமா திரையரங்கு களில் தூய்மைப்பணிகள் நேற்று தொடங்கின.

இதுகுறித்து வேலூர் திரை யரங்கு உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் தூய்மைப் படுத்தும் பணிகள் செய்யவே குறைந்தபட்சம் 2 நாட்கள் ஆகும். நீண்ட நாட்கள் கழித்து தியேட்டர்கள் திறப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இருப்பினும், தற்போது புதிய படங்கள் வெளியாக வாய்ப் பில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.டி.டி.,யில் வெளியான தமிழ் படங்கள் தற்போது தியேட் டரில் ரிலீஸ் செய்தால் மக்களிடம் போதிய வரவேற்பு பெறுமா? என்பது தெரியவில்லை.

வரும் 27-ம் தேதி ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாகின்றன. முதலில் அந்த படங்களை ரிலீஸ் செய்ய திட்ட மிட்டுள்ளோம். அதன் பிறகு, வழக்கம்போல் தமிழ் படங்கள் வெளியிட உள்ளோம். அரசு கூறிய வழிகாட்டு நெறிமுறை கள் தியேட்டரில் கட்டாயம் பின் பற்றப்படும். படம் பார்க்க வரும் ரசிகர்களும் கரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தியேட்டருக்கு படம் பார்க்க வர வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்