வேலூர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொய்கை மாட்டு சந்தை, கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தை இந்த வாரம் முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் பல்வேறு நிலைகளில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சில கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு வந்தன. அணைக்கட்டு வட்டம், பொய்கை கிராமத்தில் நடைபெற்று வந்த ‘மாட்டு சந்தை’ கடந்த 17-ம் தேதி முதல் நடத்த அனுமதி மறுக் கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 6-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்துள்ளது. எனவே, அரசு உத்தரவின் பேரில், வேலூர் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொய்கை மாட்டு சந்தை, கே.வி.குப்பம் கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த காய்கறி சந்தை மற்றும் ஆட்டுச் சந்தை ஆகியவை இந்த வாரம் முதல் திறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங் கப்படுகிறது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, காய்கறி சந்தை, மாட்டு சந்தைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். விதிமுறைகள் மீறினால் எதிர்வரும் வாரங்களில் மாட்டு சந்தை, காய்கறி சந்தை, ஆட்டுச்சந்தைகள் நடத்த தடைவிதிக்கப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago