ஏமப்பள்ளி துணை மின்நிலையத்தில் ரூ.1.60 கோடியில் புதிதாக மின்மாற்றி :

By செய்திப்பிரிவு

திருச்செங்கோடு அருகே ஏமப்பள்ளி கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 16 எம்விஏ திறன் கொண்ட மின்மாற்றி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் பங்கேற்று மின்மாற்றி செயல்பாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின சார்பில் ரூ.1.60 கோடி மதிப்பில் ஏமப்பள்ளி கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் புதியதாக 16 எம்விஏ திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொக்கராயன்பேட்டை, புதூர், அம்மாசிபாளையம், பட்லூர், தோ.கவுண்டம்பாளையம், மூலப்படுகை, ஆண்டிப்பாளையம், சிறுமொளசி, வேட்டுவம்பாளையம், அத்திப்பாளையம், சுண்டமேடு மற்றும் புதுப்புளியம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 6,500 மின்நுகா்வோர்கள் பயன்பெற உள்ளனர், என்றார்.நிகழ்ச்சியில், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, திருசெங்கோடு கோட்டாட்சியர் தே.இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்