கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை நேரடியாக நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன்மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
கடந்த ஜூன் 28 முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து தொடங்கி உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஜூம் மூலம் உதவி வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து நடைபெற்றது. இந்த மாதமும் அதே மாதிரி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த மாதம் நேரடியாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி நேரடியாக குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை போல வரும் 27-ம் தேதி அன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை நேரடியாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இது போல திங்கள் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்ட மனு வாங்கும் நிகழ்ச்சியை நேரில் நடத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago