மழைக்காலங்களில் வடிகால் பகுதிகளை - தினந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் : கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுரை

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களை ஆட்சியர் தர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியது:

கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருவமழை தொடங்குவதற்கு முன் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால் பகுதிகள் தூர்வாரப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை சார்பில் வாய்க்கால்களும் தூர்வாரப் பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லையை யொட்டியுள்ள கீரனூர்ஊராட்சியின் தொடக்கப் பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் விவசாய நிலங்களுக்கு உட்பு காமல் சென்றிட நகராட்சி மூலம் ஜெசிபி இயந்திரத்தை பயன்படுத்தி அடைப்பு ஏற்படாத வண்ணம் உடனுக்குடன் சீர்செய்திட அறிவுறுத்தப்பட்டது. மழைக் காலங்களில் கழிவுநீர் வாய்க்கால், மழைநீர் வடிகால் பகுதிகளை தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு அடைப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பொறியாளர் பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்