அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாடு செய்த - ‘திசைகாட்டும் திருச்சி’ மூலம் 4,011 பேருக்கு வேலைவாய்ப்பு :

By செய்திப்பிரிவு

அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாடு செய்த ‘திசைகாட்டும் திருச்சி’ மூலம் 4,011 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்ச ருமான கே.என்.நேரு ஏற்பாட் டின் பேரில் ‘திசைகாட்டும் திருச்சி’ என்ற பெயரில் கடந்த ஜூன் 3-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் தொடங்கப்பட்டது.

இதில் இணைய வழியா கவும், நேரடியாகவும் 15,228 பேர் விண்ணப்பித்தனர். அவர் களில் நேரடியாகவும், இணைய வழியாகவும் 11,704 பேர் நேர்கா ணலில் பங்கேற்றனர்.

திருச்சி, சென்னை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 168 முன்னணி நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களாக இம்முகாமில் பங்கேற்று 4,011 பேருக்கு வேலை அளித்துள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கேர் கல்லூரியில் நேற்று நடந்தது.

வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர் வரவேற்றார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் முஜூபுர் ரகுமான், எம்எல்ஏக்கள் காடுவெட்டி ந.தியாகராஜன், ஸ்டாலின் குமார், கதிரவன், திமுக திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்