திருநெல்வேலியிலிருந்து சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சென்னைக்கு தாமிரபரணி ரயிலை வாரந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா. ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளார்.
தெற்கு ரயில்வே பொதுமேலா ளர் மற்றும் மதுரை கோட்ட மேலாள ருக்கு அவர் அனுப்பியுள்ள மனு:
திருநெல்வேலி - அம்பா சமுத்திரம் - தென்காசி வழித்தடத்தில் சென்னைக்கு நேரடி ரயில்கள் ஏதுமில்லை. சேரன்மகாதேவி , அம்பாசமுத் திரம், கீழக்கடையம், பாவூர்சத் திரம் பகுதிகளில் 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் வசிக்கிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருநெல்வேலி அல்லது தென்காசிக்கு சென்றுதான் ரயில் வசதிகளை பெறமுடிகிறது. எனவே திருநெல்வேலி தாமிரபரணி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கினால், திருநெல்வேலி- தென்காசி வழித்தட பகுதி மக்கள் பயன்பெறுவார்கள். ஏற்கெனவே, திருநெல்வேலியிலிருந்து சேரன் மகாதேவி- அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக தாம்பரம் வரை ஒரு ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு கரோனா காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து தாம்பரத் துக்கும், திங்கள்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து திருநெல்வே லிக்கும் ரயிலை இயக்க வேண்டும். திருநெல்வேலியில் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தாதர் ரயிலின் காலிப்பெட்டிகள் இந்த ரயிலில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago