பாளை.யில் ஒரே வீட்டில் 3 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டையில் ஒரே வீட்டில் 2 வயது குழந்தை உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்துவந்த நிலையில் நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்திருந்தது. திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் 11 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. இதையடுத்து மாநகர பகுதியில் தொற்று அதிகரிக்காமல் இருக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், தச்சநல்லூர் மண்டலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

புதிய பேருந்து நிலையம் அருகே ராஜராஜேஸ்வரி நகரில் ஒரே வீட்டில் 2 வயது குழந்தை உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் மாநகர நல அலுவலர் உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மண்டல சுகாதார அலுவலர் சாகுல்ஹாமீது, சுகாதார ஆய்வாளர் பாலு ஆகியோர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். அப்பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதி அடைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்