பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலையிட வந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மற்ற கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த வர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், அதையும்மீறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாலை அணிவிக்க திரண்டனர். ஊரடங்கு விதிகளை மீறியதாக 1,100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago