விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் கதிரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
விழுப்புரம் விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத் திற்கு 2021-22-ம் ஆண்டிற்கு விதைப்பண்ணை அமைப்பதற்கு 3,600 ஹெக்டரும், விதைச்சான்று பணி செய்வதற்கு 6,665 மெட்ரிக் டன் இலக்காக பெறப்பட்டுள்ளது.
விதைப்பண்ணை அமைக்க முன்வரும் விவசாயிகள் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் மற்றும் உதவி விதை அலுவலர்களை அணுகலாம். விதைப்பண்ணை அமைக்க தேவையான கரு மற்றும் ஆதார விதைகளைப் பெற்று விதைப்பண்ணை அமைத்து நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இருமடங்கு உற்பத்தி செய்து விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை மானியங்கள் பெற்று பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago