சேலம்: சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1,12,080 கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி மருந்து நேற்று (20-ம் தேதி) சேலம் வந்தடைந்தது.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசி, தமிழகத்தில் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 1,12,080 கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி நேற்று சேலம் வந்தது. சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 24,500 டோஸ் கோவிஷீல்டு, 9760 கோவேக்சின், ஆத்தூருக்கு 8,500 கோவிஷீல்டு, 1760 கோவேக்சின், தருமபுரிக்கு 16 ஆயிரம் கோவிஷீல்டு, 3,520 கோவேக்சின், கிருஷ்ணகிரிக்கு 22 ஆயிரம் கோவிஷீல்டு, 3,520 கோவேக்சின், நாமக்கல் மாவட்டத்துக்கு 19,000 கோவிஷீல்டு, 3,520 கோவேக்சின் என மொத்தம் 1,12,080 டோஸ் தடுப்பூசி பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago