ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி - பெண்ணிடம் ரூ.37 லட்சம் மோசடி : மதுரை, திருச்சியை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த மதுரை, திருச்சியைச் சேர்ந்த 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், வி.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறும், அதிக லாபம் பெற்றுத் தருவதாகவும் திருச்சியைச் சேர்ந்த பர்க்கான், ஷகீலா பானு, ஷாஜகான், மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த ஜெய்லானி ஆகியோர் தெரிவித்தனர்.

அதை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தை மணிமேகலை கொடுத்துள்ளார். அதன் பின் ஒருமுறை மட்டும் லாபத் தொகை எனக்கூறி, ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்தை மணிமேகலையிடம் 4 பேரும் தந்துள்ளனர்.

பின்னர், லாபத் தொகையை தரவில்லை. முதலீட்டுத் தொகையான ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தையும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து மதுரை குற்றப்பிரிவு போலீஸாரிடம் மணிமேகலை புகார் தெரிவித்தார். ஜெய்லானி உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்