பாவூர்சத்திரம் சந்தையில் ஓணம் பண்டிகைக்கான காய்கறி விற்பனை மந்தமாக இருந்ததா லும், விலை உயராததாலும், விவசாயிகள் கவலை அடைந்தனர்.
பாவூர்சத்திரர் காமராஜர் தினசரி சந்தையில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்கு முந்தைய 2 நாட்களில் பாவூர்சத்திரம் சந்தை யில் காய்கறிகள் விற்பனையும், விலையும் அதிகரிக்கும். இதனால், இந்த காலகட்டத்தில் காய்கறிகளை விவசாயிகள் அதிக அளவில் கொண்டு வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி காய்கறிகள் விலை உயரவில்லை. கடந்த ஒரு வாரமாக விலை ஒரே சீரான அளவில் உள்ளது.
தக்காளி கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், பூசணிக்காய் 5 முதல் 6 ரூபாய்க்கும், சுரைக்காய் 10 ரூபாய்க்கும், புடலங்காய் 5 முதல் 10 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 10 முதல் 15 ரூபாய்க்கும், சீனிஅவரைக்காய் 10 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 10 முதல் 22 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 20 முதல் 25 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 30 முதல் 35 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “தற்போது அனைத்து மாவட்டங்களிலும் காய்கறிகள் தேவையான அளவு உள்ளது.
இதனால், வெளி மாவட்டங் களுக்கு காய்கறி விற்பனை போதிய அளவில் இல்லை. எனவே, காய்கறிகள் விலை உயராமல் உள்ளது. அனைத்து காய்கறிகளின் விலை யும் குறைவாக உள்ளது. முகூர்த்த நாட்களிலும் விலை உயரவில்லை.
கடந்த 2 நாட்களாக கேரள மாநிலத்துக்குச் சென்ற லாரிகள் தமிழகத்துக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புளி யரை சோதனைச் சாவடியில் தீவிர சோதனை நடந்து வருகிறது. கரோனா தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் கரோனா இல்லை என பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். இதனால் கேரள மாநிலத்துக்கு காய்கறிகள் விற்பனை குறைந்துவிட்டது. ஓணம் பண்டிகையையொட்டி காய்கறிகள் விலை உயராததற்கு இதுவும் ஒரு காரணம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago