நெல்லை மாவட்டத்தில் - மீண்டும் அதிகரிக்கும் கரோனா :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று மீண்டும் அதிகரித்திருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்துவந்தது. கடந்த சில நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 15-க்கும் கீழாக குறைந்திருந்தது.

இந்நிலையில், பாதிப்பு எண்ணிக்கை நேற்று திடீரென்று 29 ஆக அதிகரித்திருந்தது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நேற்று முன்தினம் 5 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருந்தது. வட்டார அளவில் பாதிப்பு எண்ணிக்கை:

ராதாபுரம், களக்காடு- தலா 4, அம்பாசமுத்திரம், மானூர், சேரன்மகாதேவி- தலா 2, வள்ளியூர்- 3, நாங்குநேரி- 1.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை யில் விழிப்பு ணர்வு முகாமும் நடத்தப்பட்டது.

ரயில்நிலைய மேலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்