குடியாத்தத்தில் கைதி தப்பி யோடிய சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள மேல் கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (72), ராஜேந்திரன் (55) ஆகியோர் இடையில் நிலப் பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதில், மோகனின் மகன் சிவா என்ற சிவராமன், அவரது மனைவி விஷ்ணு பிரியா ஆகியோரை ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (29) என்பவர் இரு தினங்களுக்கு முன்பு வழிமறித்து கத்தியால் வெட்டியுள்ளார்.
இந்த வழக்கில் மேல்பட்டி காவல் துறையினரால் சத்யராஜைகடந்த புதன்கிழமை இரவு கைது செய்தனர். அவரை குடியாத்தம் மாஜிஸ்திரேட் சிதம்பரம் வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கரன், காவலர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோரை தள்ளிவிட்டு சத்யராஜ் தப்பியோடினார்.
இதுகுறித்து, குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சத்யராஜை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், பணியில் மெத்தனமாக இருந்ததுடன் விசாரணை கைதியை தப்ப விட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மேல்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கரன், காவலர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago