தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்படும் சோலார் மின்சக்தி சாதனம் அமைப்பதற்குரிய மானிய திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நடந்தது.
திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் வோளண்மை துணை இயக்குனர் சுருளியப்பன் முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் தமிழ்நாடு எரிசக்தி துறை மேம்பாட்டு முகமை அலுவலர்களை ஆட்சியர் ச.விசாகன் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், விவசாயிகள் மோட்டார் பம்புகளை மின்சக்தி மூலமும், சோலார் மூலமும் இயங்கும் வகையில் மாற்றலாம். சோலார் மின்சக்தியை பயன்படுத்தி தடையில்லாமல் மின்சார வசதியை பெறலாம். தங்கள் பயன்பாட்டுக்கு போக உள்ள மின்சாரத்தை, மின்வாரிய கட்டமைப்புக்கு வழங்கலாம். 11 கிலோ வாட் சூரிய மின்சக்தி சாதனம் அமைக்க செலவு தொகை ரூ.5 லட்சம். இதில் மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.1.5 லட்சம் என ரூ.3 லட்சம் மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள ரூ.2 லட்சத்தை விவசாயி முதலீடு செய்ய வேண்டும். இதில் ரூ.1.5 லட்சம் வரை வங்கிக் கடனாக விவசாயிகளுக்கு கிடைக்கும்.
இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களை அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago