பாம்பனில் பராமரிப்பு பணி நடைபெறும் நிலையில் - ரயில் பாலத்தில் இன்ஜின் சோதனை ஓட்டம் :

பாம்பன் ரயில் பாலத்தில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பாம்பன் ரயிலின் தூக்குப் பாலத்தில் கடந்த ஜூன் 28-ல் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனால் ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து நிறுத் தப்பட்டு, பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது சென்னையிலிருந்து வரும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் மண்டபத்திலிருந்து சென் னைக்கு இயக்கப்படுகின்றன. வட மாநிலங்களிலிருந்து ராமேசுவ ரத்துக்கு வரும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராமநாதபுரம் வரை மட் டுமே இயக்கப்படுகின்றன.

பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் உறுதித்தன்மையை சென்சார் கருவி மூலம் சென்னை ஐ.ஐ.டி. பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று பாம்பன் ரயில் பாலத்தில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அப்போது தூக்குப் பாலத்தின் தண்டவாளத்தில் அதிர்வு மற்றும் அலாய்மெண்ட் சோதனைகளை ஸ்கேனர் மற்றும் எக்கோ சவுண்ட் கருவிகள் மூலம் ரயில்வே பொறி யாளர்கள் கண்காணித்தனர்.

இது தொடர்பான அறிக்கை, தெற்கு ரயில்வே முதன்மை பொறி யாளரிடம் (பாலங்கள்) சமர்ப்பித்த பின் ரயிலை இயக்குவது குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவு செய் யும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE