வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கி ரமராஜா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு சார்பில் தமி ழகம் முழுவதும் ஒரு லட்சம் வணிகர்களை வணிகர் சங்கப் பேரமைப்பின் உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணிகளை தொடங்கி உள்ளோம்.
வரி வசூலிப்பதில் திண்டுக் கல்லில் மாநில அரசு அதிகாரிகள் வணிகர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வரி வசூலில் கெடுபிடி காட்டுவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
உரிமம் வழங்குவதையும், வரி விதிப்பதையும் வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சி, உள்ளாட்சி, அற நிலையத் துறை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், கரோனா ஊரடங்கின்போது முழுமையாக மூடப்பட்ட நிலையில் அந்த கடை களுக்கு வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பெட்ரோல் விலையை மாநில அரசு மூன்று ரூபாய் குறைத்தது போல், மத்திய, மாநில அரசுகள் இணைந்து டீசல் விலையையும் குறைக்க வேண்டும்.
கேரளாவில் வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் உள்ள வணிகர் களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக் கை வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago