முகூர்த்தம், வரலட்சுமி நோன்பு மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் மல்லிகை பூக்கள் விலை நேற்று கிலோ ரூ.2,000-க்கு விற்பனையானது. கரோனாவுக்குப் பிறகு பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.
கரோனா ஊரடங்கால் கோயில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் பூ வியாபாரம் மந்தமடைந்தது.
தற்போது கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ள நிலையில், வர லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. முகூர்த்த நாட்களும் தொடங்கி விட்டன. கேரளாவில் ஓணம் பண்டிகை நாளை (21-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
இதை யொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை நேற்று களைகட்டியது.
பூக்கள் வாங்க உள்ளூர் மக்கள், கேரள வியாபாரிகள் திரு விழாவைப் போல் திரண்டனர்.
இதன் காரணமாக, பூக்கள் விலை வழக்கத்தை விட நேற்று அதிகரித்தது. நேற்று முன்தினம் கிலோ 500-க்கு விற்ற மதுரை மல்லிகை நேற்று ஒரே நாளில் கிலோ ரூ.2000 ஆக உயர்ந்தது. கனகாம்பரம் கிலோ ரூ.700, சம்பங்கி ரூ.400, முல்லைப்பூ ரூ.800, பிச்சிப்பூ ரூ.700, செவ் வந்தி 150, பட்டன் ரோஸ் ரூ.220, தாழம்பூ ஒன்று ரூ.650-க்கு விற்பனையாகின. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது.
இதுகுறித்து மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், நேற்று முன்தினம் கிலோ ரூ.500-க்கு விற்ற மதுரை மல்லிகை, நேற்று ரூ.2,000-க்கு விலை போனது. தொடர்ந்து பண்டிகைகள் வரு வதால் பூக்களின் விலை மேலும் உயரும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago