41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் : சாலை பணியாளர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் வட்டச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை அஞ்சல் அனுப்பும் போராட்டம் கரூர் தலைமை அஞ்சலகம் முன் நேற்று நடைபெற்றது.

இதில் சாலை பணியாளர்கள் கோரிக்கை அஞ்சல்களை முதல்வருக்கு அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை முதல் அக விலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலை பிரிவில் பணியாற்றும் சாலைப் பணியாளர்கள் சாலையில் ஏற்படும் பள்ளங்களை சரி செய்வதற்கு தார் காய்ச்சுதல், முட்புதர்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகளின் போதுகாயம் மற்றும் விபத்து ஏற்பட்டு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே ஊதியத்தில் 10 சதவீதம் விபத்துப்படியாக வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்