திருநெல்வேலியில் வளர்பிறை முகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மல் லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு நேற்று விற்பனையானது.
இன்று வளர்பிறை முகூர்த்தம், நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி பூக்களின் தேவை அதிகரி்த்துள்ளது. கடந்த 2 நாட்களுக்குமுன் 1 கிலோ ரூ.400 என்று விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று காலையில் ரூ.1,000-க்கும், பிற்பகலில் ரூ.1,500-க்கும் விற்பனையானது. இதுபோல் பிச்சி ரூ.1000-க்கும், கேந்தி- ரூ.100, வாடாமல்லி- ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago