தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மண்டல அலுவலக வாயில்கூட்டம் மாநிலத்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைப்பொதுச் செயலாளர் பாண்டியன், அமைப்பு செயலாளர் ராஜீவ்காந்தி, நிர்வாகிகள் பன்னீர் செல்வம், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தபோது கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.கொள்முதல் செய்யப்பட்ட நெல் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவையாகும். முறையான ஆய்வு மேற்கொள்ளாததால்தான் தரமற்ற நெல் கொள்முதல் செய்யப்படுகிறது மாவட்டத்தில் சொந்தமாக ஒரு சேமிப்பு கிடங்கு கூட இல்லை. இந்த விவரங்களை உணவுத்துறை அமைச்சர், நிர்வாக இயக்குனர் மற்றும் ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago